கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக மக்கள் வரிசையாக நிற்பது போன்று போலியான வரிசை ஒன்றை உருவாக்கி அதனை காணொளியாக எடுக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திகன பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் வசிக்கும் சுமார் 60 தொழிலாளர்கள் அடங்கிய குழு ஒன்றுக்கு தலா 2,500 ரூபா வீதம் கொடுத்து இந்த போலி வரிசையை உருவாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் கோரிக்கையின் பேரில் இந்த போலி வரிசையை உருவாக்கி அதனை காணொளிகளாக எடுக்க முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் பின்னர், போலி எரிவாயு வரிசையில் காத்திருந்த பெண்கள் மற்றும் ஆண்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு அனுப்ப தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்