இலங்கையில் புத்தளம் பகுதியை சேர்ந்த கட்டாரில் வசித்து வந்த முஹம்மத் முபாரிஸ் அவர்களது அன்பு மனைவியான முஹம்மத் ரௌப் பாத்திமா ஷஃபாரிஜ் (33 வயது) இன்று 2024 செப்டெம்பர் 28ஆம் திகதி, சனிக்கிழமை புனித உம்ரா கடமையை முடித்து கத்தார் திரும்பி வரும் வழியில் கத்தாரின் எல்லையை அண்மித்த நிலையில் ஸல்வா வீதியில் அகால மரணமடைந்தார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக.
அன்னாரின் இப்பாரிய இழப்பை தாங்கும் மன வலிமையையும் பொறுமையையும் அன்னாரின் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு வல்ல இறைவன் வழங்குவானாக
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் தரப்படும் இன்ஷா அல்லாஹ் .
0 Comments