கணவன், மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (07) இச்சம்பவம் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.

குஞ்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆணும் 56 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இதேபோன்று கடந்த 06 ஆம் திகதி இரவு ஏற்பட்ட தகராறின் பின்னரே கணவன், மனைவியை கொலை செய்து பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளமை பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரி, குற்றம் நடந்த இடத்தில் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.