2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்குகள் அடிப்படையில் தற்போதைக்கு அநுரகுமார திசாநாயக்க சுமார் 60 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.



இதுவரை வெளியான தபால் மூல வாக்குகளில் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க பெற்றுக் கொண்டுள்ளார்.


அதேவேளை தமது வாக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டு, அநுரகுமார முதன்மை பெறுவதை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.