இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
பந்துவீச்சில் இலங்கை அணியின் சார்பில் பிரபாத் ஜெயசூர்ய 6 விக்கெட்டுகளையும் அறிமுக வீரரான நிசான் பீரிஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 602 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இலங்கை அணியின் சார்பில் கமிந்து மெண்டிஸ் 182 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 106 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டனர்.
இந்தநிலையில் இலங்கை அணி 514 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
0 Comments