காசா மீதான இஸ்ரேலியப் போரின் பெருகிவரும் செலவிற்கு நிதியளிப்பதற்காக, செலவழித்தல் மற்றும் கடன் வாங்குதல் ஆகிய நிலைக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டுள்ளது.

மேலும் காசா மீதான போர் அதன் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையையும் சேதப்படுத்தியதால், அதன் வரலாற்றில் முதல்முறையாக கடன் மதிப்பீட்டு முகமைகள் இஸ்ரேலை தரமிறக்கியுள்ளன.

வரவிருக்கும் மாதங்களில் 40,000 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய வணிகங்கள் திவாலாகும் நிலையை எதிர் கொண்டுள்ளன.