யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த மூத்த சட்டத்தரணி அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியை சேர்ந்த கனகசபாபதி நமநாதன் (வயது 86) எனும் சட்டத்தரணியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் , வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
அந்நிலையில் திங்கட்கிழமை (09) இவருக்கு உணவு கொண்டு சென்றவர் , வீட்டில் இவரது நடமாட்டத்தை காணாது , அயல்வீட்டுக்காரர்களுக்கு அறிவித்து , வீட்டினுள் சென்று பார்த்த போது அவர் நிலத்தில் விழுந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
அதனை அடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments