இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே இப்போது போர் வெடித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் டிரோன் கமெண்டரை இப்போது இஸ்ரேல் கொன்றுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது பேச்சை வைத்துப் பார்த்தால் இப்போதைக்குப் போர் முடிவது போலத் தெரியவில்லை என்றே உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல் காசா இடையே போர் தீவிரமாக நடந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இப்போது லெபனான் மீதும் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
லெபனான் நாட்டின் முக்கிய இலக்குகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி முகமது ஹுசைன் கொல்லப்பட்டுள்ளார். இவர் ஹிஸ்புல்லா விமானப் படைத் தளபதியாக இருக்கிறார். ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து நடத்தப்படும் நான்காவது தாக்குதல் இதுவாகும். 1973இல் பிறந்த ஸ்ரர், நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் பயிற்சி பெற்றார். அதன் பிறகு ஏமன் நாட்டிற்கும் சென்றவர் ஆவார். இவரைத் தான் இப்போது இஸ்ரேல் ஸ்கெட்ச் போட்டு பலி தீர்த்துள்ளது.
லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற இந்த ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உலக நாடுகள் இது எங்குப் பிராந்திய போராக வெடித்து விடுமோ என்று அஞ்சுகிறது. ஈரான் உட்பட மற்ற உலக நாடுகள் வந்தால் அது பேராபத்தில் சென்று முடியும். இதனால் குறைந்தபட்சம் 21 நாட்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்துகின்றன.
ஆனால், இஸ்ரேல் இதை எல்லாமே காதிலேயே வாங்கிக் கொள்வதில்லை. லெபனான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து தீவிரப்படுத்தியே வருகிறது. உலக நாடுகளின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது ராணுவம் முழு வீச்சில் தாக்குதலைத் தொடரும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தெற்கு இஸ்ரேல் பகுதிக்கு அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்கும் சூழல் உருவாக வேண்டும். அதுவரை ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான தாக்குதலை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் பேச மாட்டோம். எங்கள் செயல்களே பேசும்” என்று அவர் தெரிவித்தார்.
0 Comments