ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் வினாக்களை முன்கூட்டியே வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த ஆசிரியர் நேற்று முன்தினம் (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அலவ்வ, துல்ஹிரிய, கோவில் தோட்டத்தை் சேர்ந்த எம்.சி. குமார இளங்கசேகர உதவி வகுப்பு ஆசிரியர் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையின் கேள்விகளை கசியவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 23 ஆம் திகதி குருநாகல் தித்தவெல்ல கைது செய்யப்பட்ட ஈ.பி.எஸ். பிரேமதிலக தேசிய கல்வி நிறுவனம் புலமைப்பரிசில் பரீட்சைக்காக திட்டமிடல் பணிப்பாளரால் தயாரிக்கப்பட்ட சில கேள்விகளை குறித்த ஆசிரியர் தனது வகுப்பின் பிள்ளைகளுக்கு வாட்ஸ்அப் குழு மூலம் விநியோகித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து அந்த வாட்ஸ்அப் குரூப்பை ஆசிரியர் நீக்கியதும் தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த நீக்கப்பட்ட தரவுகளை மீட்பதற்காகவும், இந்தக் கேள்விகளை கசியவிடுவதில் ஈடுபட்டுள்ள மற்றவர்களைக் கண்டறியவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் கடுவெல நீதவான் சனிமா விஜயபண்டார முன்னிலையில் நேற்று (25) ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் மாதம் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 Comments