ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்குரிய வழக்கமான ஊழியர்களுக்கு இந்த வாகனங்கள் வழங்கப்படாத நிலையில், முன்னாள் ஜனாதிபதியினால் அரசியலமைப்பின் 41 (1)ஆவது சரத்தின் கீழ் நியமிக்கப்பட்ட தனது தனிப்பட்ட ஊழியர்களுக்கு அவை வழங்கப்பட்டள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், ஜனாதிபதி செயலகத்தில் அதிக வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாத காரணத்தினால் மாத்திரமே இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இவற்றை இவ்வாறு காட்சிப்படுத்துவது நோக்கம் அல்ல எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அண்மையில் வழங்கிய பணிப்புரையின் பிரகாரம், இந்த வாகனங்களை அவசர சேவைகளுக்காக விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவிக்கின்றது.
0 Comments