ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நீண்ட நாட்களாக அவரைப் பற்றிய எந்தத் தடயமும் இல்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் யஹ்யா சின்வார் உயிரிழந்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் சந்தேகிக்கின்றது.

ஆனால் அதை உறுதி செய்ய உறுதியான ஆதாரம் இல்லை என்கிறார்கள்.

இதன் காரணமாக ஹமாஸ் அமைப்பின் தலைவரை கண்டறிய விசாரணை நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.