பொலன்னறுவை- மஹியங்கனை வீதியில் லத்பந்துர சந்தி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்றரை வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த குடும்பம்

வேன் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் காயமடைந்துள்ளனர்.