தேசத்தின் கடைசி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை இலங்கை மக்கள் தெரிவு செய்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.*
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, இந்த ஜனாதிபதி பதவிக்கு பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை நாடு காணாது என உறுதியளித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் ஜனாதிபதி தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நோக்கத்திற்காக பொதுமக்கள் தங்களின் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம், ”என்று அவர் மேலும் கூறினார்.
பாராளுமன்றம் கலைக்கப்படுவதாகவும், அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் NPP அரசியல் குழு உறுப்பினர் உறுதிப்படுத்தியுள்ளார்.
“இது ஆரம்பம்தான். பிரஜைகளின் அங்கீகாரத்துடனும் உதவியுடனும் இந்த தேசத்தை கட்டியெழுப்புவோம்” என சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்தார்.
0 Comments