நாடளாவிய ரீதியில் நேற்றிரவு முதல் நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் பகல் 12 மணிக்கு நீக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலனை முன்னிட்டு நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் நண்பகல் 12.00 மணி வரை அது நீடிக்கப்பட்ட நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.