நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மத்திய ஒப்பந்தத்திலிருந்து முன்னணி வீரர்களான கொன்வே மற்றும் பின் எலன் சமீபத்தில் விலகியிருந்தனர்.

இந்நிலையில், இவர்களுக்கான மாற்று வீரர்களின் பெயரை நியூசிலாந்து கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

புதுமுக வீரர்களான நெதன் சுமித் மற்றும் ஜோஷ் கிளார்க்சன் ஆகியோரை சேர்த்து 2024 - 2025 வரையிலான மத்திய ஒப்பந்த பட்டியலை நியூசிலாந்து கிரிக்கட் சபை இறுதி செய்துள்ளது.

நியூசிலாந்து அணியின் 2024-25 மத்திய ஒப்பந்தப் பட்டியல்: டொம் ப்ளன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டபி, மெட் ஹென்றி, கைல் ஜேமிசன், டொம் லத்தம், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், வில் ஓ'ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், நெதன் ஸ்மித், இஷ் சோதி, டிம் சவுதி மற்றும் வில் யங்.