Ticker

6/recent/ticker-posts

இங்கிலாந்தில் புட்போல் விளையாட ஆயத்தமான இலங்கையர், மார்பை பிடித்தபடி சரிந்து 2 வாரங்களின் பின்னர் மரணம்..


லெஸ்டரில் வாழ்ந்து வந்த கொழும்பை சேர்ந்த ரசீன் அகமது என்கிற சகோதரரின் ஜனாசா செய்தி ஐக்கிய இராஜ்ஜிய இலங்கை மக்களையே உலுக்கியது.

நல்ல திடகாத்திரத்தோடு தான் இரண்டு கிழமைக்கு முன் இருந்தார், வழமையாக புட்போல் விளையாட்டில் ஈடுபாடு உள்ளவர், பள்ளியிலும் பல வருடமாக நிர்வாக உறுப்பினர், இமாம் ஜமாத்தில் எப்போதும் முதல் சப்பில் தொழுகையை நிறைவேற்றகூடியவர். இரண்டு மகன்களை ஹாபிசாக்கியும் அழகுபார்த்தார். மாஷா அல்லாஹ்.

யாருடனும் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தமது பாட்டில் இருப்பார், வழமைப்போல புட்போல் விளையாட சென்றார், ஆயத்தமாக தொடங்கும் போது திடீரென மார்பை பிடித்து கொண்டே சரிந்தவர் உடனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்,


இரண்டு கிழமையாக icu ward இல் உயிருக்கு போராடி நேற்று 13-09-2024 இறையடி சேர்ந்தார்🥹🥹🥹 முழு லெஸ்டர் வாழ் மக்களும் அவருக்காக கேட்காத துஆ இல்லை, குணமடைந்துவிடுவார் என்று எல்லோரும் பிரார்த்தித்த வண்ணம் இருக்க அவருக்கான நேரம் முடிந்து விட்டது என்பதை திடீர் ஜனாசா செய்தி அறிவித்து விட்டது.

இததான் மனித வாழ்க்கை, யாரை பார்த்தாலும் நேரம் இல்லை, நான் பிசி, இது தான் அநேகரின் நிலை. என்ன பட்டம் பதவியில் செல்வ நிலையில் நாம் வாழ்ந்தாலும் நமக்கான நேரம் முடிந்து விட்டால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு அபோடியே நாம் போய் விடுவோம் என்று தெரிந்தும் நாம் மறந்து வாழ்கிறோமே.

நம் குடுமத்துக்கும் உறவினர் நண்பருக்கும் முடிந்தளவு நேரத்தை வழங்கி மகிழ்விப்போம், இருக்கும் வரை எல்லோருடனும் நல்ல முறையில் பழகி தேவையுள்ளவர்களுக்கு உதவி மறுமை வாழ்வுக்கு நன்மைகளையும் இறைவனின் பொருத்தத்தையும் முடிந்தளவு சம்பாதித்து கொள்வோம்.

வபாத்தான சகோதரர் ரசீனை வள்ள இறைவன் புனித ஜன்னதுல் பீர்தாவுஸ் சுவானத்தில் அங்கீகரிப்பானாக!

அவருடைய இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியையும் பொறுமையையும் மனோதைரியத்தையும் அவரது குடும்பத்துக்கு வழங்கி அருள் பாலிப்பானாக !

Post a Comment

0 Comments