றாகம பொலிஸார் நேற்று (29) மாலை முகப்புத்தக விருந்து நிகழ்வொன்றை சுற்றிவளைத்து 18 மாணவர்களை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நுகவெல கெசல்வத்தையில் உள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் இரகசியமாக ஒன்று கூடுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட 16 சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் உள்ளனர்.
கொட்டாஞ்சேனை, புளூமெண்டல், தெமட்டகொட, வெல்லம்பிட்டிய, கொலன்னாவ உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள், இந்தப் பிரதேசங்களில் உள்ள பிரபல பாடசாலைகளில் பயின்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த மாணவர்கள் சில காலமாக போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பணக்காரத் தோற்றத்தைக் கொண்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
சந்தேகநபர்கள் றாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
ராகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் புத்திக ராஜபக்ஷ மற்றும் திணைக்களத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோரின் தலைமையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
0 Comments