கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (16) முன்னெடுக்கப்பட்ட கூட்டு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடவத்த நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விருந்துக்கு பல பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளும் வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விருந்தில் இணைந்த இளைஞர்கள் குழுவொன்று விடுதியில் அறைகளை முன்பதிவு செய்து, அறைகளுக்குள் சட்டவிரோத போதைப்பொருளை பயன்படுத்திய போது மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் ஐஸ், கொக்கேன் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 19 முதல் 30 வயதுடையவர்கள் என மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments