காசாவில் ஐக்கிய நாடுகள் சபையால் நடாத்தப்படும் பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் ஹமாஸ் அமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்டதாகவும் பொதுமக்களுக்கு சேதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் வைத்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐ.நா கண்டனம்
இந்தத் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்தத் தாக்குதல் போர் தொடங்கிய 11 மாதங்களில் குறித்த பாடசாலை மீது நடத்தப்பட்ட ஐந்தாவது தாக்குதல் எனவும் ஐ.நா கூறியுள்ளது.
0 Comments