மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
வடகிழக்கு மாகாணமான யோப், தா்முவா கவுன்சில் பகுதிக்கு மோட்டாா்சைக்கிள்களில் வந்த 50-க்கும் மேற்பட்ட போக்கோ ஹராம் பயங்கரவாதிகள், அங்கிருந்தவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். பின்னா் அங்குள்ள கட்டடங்களுக்கு அவா்கள் தீவைத்தனா். இதில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.
மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் தீவிர மதவாதச் சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தி போக்கோ ஹராம் அமைப்பு கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.
அவா்கள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 35,000 போ் உயிரிழந்துள்ளதாகவும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறி தவித்துவருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. [எ]
0 Comments