'திருமணம் வேண்டாம்; தம்பிதான் முக்கியம்’ - 48 வயது தம்பியை மகன் போல கவனிக்கும் அக்கா | Sister Love
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்திலுள்ள அங்கலேஷ்வர் பகுதியைச் சேர்ந்த 51 வயது ஷீதல் மோதி, 48 வயது தம்பியைத் தனது ‘மகன்’ போன்று கவனித்துக் கொள்கிறார். மனவளர்ச்சி குன்றிய அஷ்வின் மோதி, இந்த வயதிலும் ஆறு மாத குழந்தையைப் போன்று நடந்து கொள்கிறார்.
குளிப்பாட்டுதல், உடை மாற்றிவிடுதல் போன்ற அவரின் அனைத்துத் தேவைகளையும் ஷீதல்தான் கவனிக்கிறார். தன் தம்பிக்கு உணவு ஊட்டியும் விடுகிறார் அவர். ஷீதல் வங்கியொன்றில் கிளார்க்காகப் பணிபுரிந்து வந்தார். ஆனால், அவருடைய பெற்றோரின் மறைவுக்குப் பின்னர், தம்பியைக் கவனித்துக் கொள்வதற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்துள்ளார்.
தனது தம்பிக்காக, ஷீதல் திருமணம் செய்துகொள்ளவில்லை. பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக, ஷீதல் சில நாட்கள் தனது வீட்டிலும் சில நாட்கள் சூரத்தில் உள்ள ஆஷிர்வாத் மனாவ் மந்திர் எனப்படும் ஆசிரமத்திலும் தங்குகிறார். இங்கு, மனநலம் குன்றியவர்கள் மற்றும் பல மாற்றுத் திறனாளிகள் கவனித்துக் கொள்ளப்படுகின்றனர்.
0 Comments