சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஜூலை மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை மகளிர் அணியின் சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மே மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனையாகவும் சமரி அத்தப்பத்து தெரிவாகியிருந்தார்.

இந்தநிலையில் ஜூலை மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்காக இலங்கை மகளிர் அணியின் சமரி அத்தபத்துவுடன், இந்திய மகளிர் அணியின் ஸ்மிருதி மந்தனா மற்றும் செஃபாலி வர்மா ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டனர்.

இதேவேளை ஜூலை மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான கஸ் அட்கின்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.