எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) தாம் ஆதரிக்கும் வேட்பாளரை எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தி தொடர்பில் நாம் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவரிடம் வினவியபோதி அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான இந்த கட்சி ஓகஸ்ட் 14 ஆம் திகதி குறித்த தீர்மானத்தை அறிவிக்கவுள்ளது.
இது குறித்து கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் கடந்த 6ம் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
“ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து எங்கள் கட்சியின் உச்ச சபை விரிவான விவாதத்தை நடத்தியது.
அதன்படி, 14ஆம் திகதி காலை 10 மணிக்கு இறுதி தீர்மானம் எடுக்க முடிவு செய்துள்ளோம். அத்துடன், எமது கட்சி இன்னும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருப்பதால், அவர்கள் கூட்டணிக் கூட்டங்களில் பங்கேற்பார்கள்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) எங்களது ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன் தற்போதைய ஜனாதிபதியும் எங்களின் ஆதரவை கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.
நாம் கூறுவது தற்போதைய பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும். எங்களால் ரிவேர்ஸ் கியரில் திரும்பிச் செல்ல முடியாது…” என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரிஷாத் பதியுதீன் சிறுபான்மை கட்சி என்ற வகையில் சிறுபான்மை சமூகத்திற்கு ஏற்றார்போல் புத்திசாதூர்யமான தீர்மானமொன்றினை எடுப்பார் என்பது சிறுபான்மை மக்களின் நிலைப்பாடாகும்.
0 Comments