ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நியமிக்கும் நிகழ்வில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளாதது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைத் தவிர, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் சசீந்திர ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷவின் சகோதரர்களான யோஷித ராஜபக்ஷ, ரோஹித ராஜபக்ஷ மற்றும் அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
ஜனாதிபதி வேட்பாளரை கட்சி முன்னிறுத்துவது தொடர்பாக ராஜபக்ஷ குடும்பத்தில் கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
0 Comments