மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் உரியச் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும் எனச் சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இரத்தினபுரி, காலி, கேகாலை, மாத்தறை, களுத்துறை, மொனராகலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் அதிக ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் தசை வலி, தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால், முறையான மருத்துவ ஆலோசனையைப் பெறுவது கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.