கம்பஹா, நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணி புரிந்து வந்த யுவதி ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
டட்லி சேனநாயக்க மாவத்தையில் வசித்து வந்த 21 வயதுடைய ராஜபக்ஷ ஆராச்சிலாகே செனாலி ராஜபக்ஷ என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த யுவதி நேற்று காலை வீட்டில் ஏற்பட்ட அவசர சுகயீனம் காரணமாக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை நேற்று வரக்காபொல மரண விசாரணை அதிகாரி விமலசிறி ராஜபக்ஷ முன்னிலையில் இடம்பெற்றது.
எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். உயிரிழந்தவர் மூத்த மகள் என உயிரிழந்த யுவதியின் தாயார் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ தனியார் வங்கியொன்றில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
நானும் எனது கணவரும் வியாபாரம் செய்கிறோம். மகளுக்கு எந்த நோயும் இல்லை. பிறந்த நாளில் இருந்து இன்று தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் வங்கி ஊழியர்களுடன் மகள் நிகழ்வு ஒன்றிற்கு சென்றார். இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு வந்தார். வந்து குளித்துவிட்டு மாடிக்குச் சென்றார்.
அதிகாலை 3 மணியளவில், என் மகள் மாடியில் இருந்து இறங்கி குளியலறைக்கு செல்வதை பார்த்தேன். அதன்பிறகு நாங்கள் இருவரும் தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு என் மகள் வந்தார், எனக்கு சோர்வாக இருப்பதாக கூறினார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதிலும் அவர் உயிரிழந்து விட்டார். எனினும் மரணத்திற்கான காரணம் என்ன என்று இதுவரையிலும் தெரியவில்லை என உயிரிழந்த யுவதியின் தாயார் தெரிவித்துள்ளார்.
0 Comments