மாத்தளை – நாவுல, அடவல கிராம மக்கள் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கோரி கிராமத்துக்கு வருபவர்களை தாக்கப் போவதாக விளம்பரங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

பல ஆண்டுகளாக தங்கள் கிராமத்துக்கு வந்த அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர்.

தங்கள் கிராமத்துக்கு செல்லும் சாலை வசதி, விவசாய நிலங்களில் உள்ள பிரச்சினை, போக்குவரத்து சிரமம் போன்ற காரணங்களால், இத்தேர்தலில், தங்கள் கிராம மக்கள் வாக்களிப்பதை புறக்கணிப்பதாக, கிராம மக்கள் கூறுகின்றனர்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல்வாதிகள் தங்கள் கிராமத்திற்கு வரவேண்டாம் என்றும் அவ்வாறு வந்தால் பதில் சொல்ல தயார் என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர்.