பெற்றோர்கள் அறியாமல் குழந்தைகளுக்கு பாராசிட்டமால் அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தேசிய நச்சு தகவல் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன வலியுறுத்துள்ளார்.

சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாகும்போது சில பெற்றோர்கள் அதிக அளவு பாராசிட்டமால் கொடுக்கப்படுவதால் குழந்தைகளின் நிலை மேலும் மோசமான நிலைக்குள்ளாகும் வாய்ப்புள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டார்.

எனவே மருத்துவர் பரிந்துரைத்த அளவில் மாத்திரம் பாராசிட்டமால் மருந்தை கொடுக்க வேண்டும் என்றும் வைத்தியர் குறிப்பிட்டார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் குழந்தைக்கு பாராசிட்டமால் மருந்து கொடுக்க வேண்டுமா என்றும், மேலும் குழந்தைக்கு கூடுதல் டோஸ் பாராசிட்டமால் கொடுக்க வேண்டுமா என்றும் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக ஏதேனும் மேலதிக ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள 0112 686 143 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.