Ticker

6/recent/ticker-posts

ஜப்பானில் இதுவரை இல்லாத அளவிற்கு அரிசிக்கு தட்டுப்பாடு


ஜப்பானில் பிரதான உணவுகளில் ஒன்றான அரிசிக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டோக்கியோவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் , “இந்த கோடையில் வழக்கமான அரிசியின் பாதி அளவை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒரு நாளைக்கு ஒரு பை அரிசி மட்டுமே வாங்கிக்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி தட்டுப்பாடு தொடர்பாக விவசாயத்துறை அமைச்சர் டெட்சுஷி சகாமோடோ கூறுகையில், பற்றாக்குறை நிலைமை விரைவில் தீர்க்கப்படும். அதுவரை மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். செப்டம்பர் இறுதிக்குள் 40 சதவீத பயிர் கிடைக்கும் நிலையில் புதிய அறுவடை பருவம் தொடங்கியுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments