ஜனாதிபதி தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்னர் பாரிய வன்முறைகளை ஏற்படுத்த பெரும் சதி தீட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நாட்டை பங்களாதேஷ் போன்ற நிலைமைக்கு தள்ளவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றும் அதற்கு சிவப்புத் தம்பிகளுக்கும் தொடர்பு உள்ளது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் ஜனாதிபதி ஆசனத்தில் வைத்திருக்க திட்டமிட்ட சூழ்ச்சிகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.