காசாவில் உள்ள பள்ளிவாசலில் புனித குர்ஆன் பிரதிகளை எரித்த இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு எதிராக அரபு மற்றும் முஸ்லீம் நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது.
வெள்ளிக்கிழமை, அல் ஜசீரா அரபு இஸ்ரேலிய ராணுவத்தினரின் கேமராக்களில் இருந்து பெறப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பியது, அவர்கள் புனித குர்ஆன் பக்கங்களை கிழித்தெறிந்து அவற்றை வடக்கு காசாவில் உள்ள பானி சலே பள்ளிவாசலில் எரித்தனர்.
இந்நிலையில் ஹமாஸ் சனிக்கிழமையன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது,
இஸ்ரேலியப் படைகளால் "குரான் நகல்களை எரித்தல் மற்றும் மசூதிகளை இழிவுபடுத்துதல் மற்றும் அழித்தல்" ஆகியவற்றைக் கண்டித்துள்ளது.
இது, "இந்த அமைப்பின் தீவிரவாதத் தன்மையையும், அதன் வெறுப்பு நிறைந்த குற்றப் படைவீரர்களையும், நமது தேசத்தின் அடையாளம் மற்றும் புனிதங்கள் தொடர்பான எதற்கும் எதிரான அவர்களின் பாசிச நடத்தையையும் உறுதிப்படுத்துகிறது" என்று ஹமாஸ் கூறிது.
பாலஸ்தீனத்தில் உள்ள முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களின் புனிதத் தலங்களைப் பாதுகாப்பதற்கும், காசா பகுதிக்கு எதிரான "அழிப்புப் போரை" முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் "உலகின் சுதந்திரமான மக்கள்" செயல்பட வேண்டும் என்று பாலஸ்தீனிய குழு அழைப்பு விடுத்துள்ளது.
காசாவில் கடந்த 10 மாதங்களில் இஸ்ரேல் 610 மசூதிகள் மற்றும் மூன்று தேவாலயங்களை முற்றாக அழித்துள்ளதாக காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
0 Comments