தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள இரண்டு அல்லது 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இந்த ஊடக சந்திப்பில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரும் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.