இந்திய மீனவர்கள் பயணித்த படகு ஒன்று கச்சத்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் விபத்திற்குள்ளானதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதில் 4 மீனவர்கள் இருந்துள்ள நிலையில் அதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்தது.

மற்றைய இருவரும் பாதுகாப்பாக நீந்தி கச்சத்தீவில் கரை சேர்ந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.