இந்தக் காலத்தில் காதல் செய்வது எளிதாகி விட்டது காரணம் கையிலேயே அலைப்பேசி அதுவும் ஆண் பெண் இருவரிடத்திலும் அவசியாக இருப்பதை விட அநாவசியமாக இருக்கிறது என்றால் மிகையில்லை.
அதே போலவே சமீனா ரியாஸ் இருவரும் மதுக்கூர் காதலிக்கிறார்கள் பாருங்க ரியாஸ் உண்மையாகவே உயிருக்கு உயிராகலே காதலிக்கிறான் இது அவனின் அம்மாவிற்கு பிடிக்கவில்லை அதற்கான காரணம் நான் பார்க்கிற பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டுமென நினைத்தாள் அதில் தோல்வியுற்றாள் உண்மையான காதல் வெற்றி.
பிறகென்ன நம்ம ரியாஸ் வழக்கம் போல அயல்நாட்டில் வேலை பார்க்க சென்று விடுகிறான் அங்கே தான் சமீனா மாமியாருக்கு பயந்து பயந்து நாட்களை தள்ளி இருக்கிறாள் வாய் பேசாதவளா இருந்தால்தான் மாமியாருக்கு மிரட்ட வசதியாச்சே.
தாயை இழந்து தந்தையின் அரவணைப்பிலும் கணவன் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கையோடு இருந்திருக்கிறது பல கனவுகளோடு அந்த கனவு மாமியார் சாவடிக்கிற மாதிரி கண்டதுதான் தாமதம் காலையில் உண்மையாகவே மாமியார் அடித்தே கொன்றிருக்கிறார். அதனை மறைக்க படாத பாடும் பட்டு இருக்கிறார் இறுதியில் இறைவனின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை மருத்துவச் சான்று உறுதி படுத்தி இருக்கிறது.
சமீனா பர்வீனுக்கு கடந்த பதினைந்து நாட்களுக்கு முன் வயிற்றில் நீர்க்கட்டி இருந்து அதனை ஆபரேசன் செய்து அகற்றி தந்தையோடவே இருந்திருக்கிறார். விதி கணவரிடமிருந்து போன் வந்து அம்மா தனியாக இருக்கிறாங்க வீட்டிற்கு போ என சொன்னவுடன் கணவனின் சொல்லை தட்டாது இரவு பத்து மணிக்கு சின்னம்மா துணையுடன் போயிருக்கிறது காலை ஆறு மணிக்கெல்லாம் எல்லோருக்கும் விடிந்து வெளிச்சம் தெரிந்தது சமீனாவிற்கு இருண்டு விட்டது.
இதில் வேடிக்கை என்னவெனில் மாமியா மயங்கி கிடந்த நிலையில் இருவரும்தான் வீட்டிலேயே உண்மையாகவே பாத்ரூமில் விழுந்து இறந்து விட்டதா பிள்ளை என சமீனா வின் தந்தை அல்லாபிச்சை அவர்கள் பிள்ளை இயற்கையாக இறந்து விட்டதோ என எண்ணி காவல் துறையில் எழுதி கொடுத்து உடலை பிரேத பரிசோதனையின்றி பெற்றிருக்கிறார். மதுக்கூர் மக்கள் போராடி இதுபோல் சம்பவம் நடந்ததும் இல்லை இனி நடக்கவும் கூடாதென முடிவாக இருந்து அந்த பிள்ளைக்கு பிரேத பரிசோதனை செய்து நியாயம் கிடைக்கச் செய்திருக்கிறார்கள்.
காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் இந்த விஷயத்தில் நேர்மையாகவும் அதே சமயத்தில் சட்டத்தின் படி என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அந்த நடவடிக்கை உடனே எடுத்து மாமியாரை கொலை வழக்கு பதிந்து சிறையில் அடைத்திருக்கிறார் .
இதில் இருந்து என்ன பாடம் கற்றோம் என்றால் பிடிக்காத. மாமியார் மருமகளை கணவர்கள் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு ஒரே வீட்டில் இருக்க அதுவும் இருவர் மட்டுமே இருக்க அனுமதிக்கவே கூடாது.
ஆயிரம் கனவுகளோடு தாயை இழந்து கணவனே நமக்கென வந்த இளம் ரோஜாவை இறக்கமின்றி வெந்தீர் ஊற்றி கருகச் செய்த மாமியாருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் இனி இது போல மருமகளை கொடுமைப்படுத்தக் கூடிய மாமியார் இருந்தால் திருந்திக் கொள்ளுங்கள்.
ஒரு காலத்தில் நீங்களும் மருமகளாக இருந்ததை மறக்காதீர்கள்.
இறைவா காதலித்த திருமணம் செய்தது குற்றமா அக்குற்றத்தை மன்னித்து சமீனாவிற்கு அழகிய சுவனத்தை கொடுப்பாயாக.
இக்கொலையில் மேலும் யாரேனும் இருந்தால் தப்பிக்க விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை நமக்கென்ன கடக்காமல் நம்ம கடமையாக நம்ம சகோதரியாக நம்ம பிள்ளையாக நியாயம் கிடைக்க துணை நின்ற அத்துனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி.
குறிப்பு......பிடிக்காத மருமகளுக்கு முடியாவிட்டாலும் வெந்நீர் வைத்து கூட கொடுக்க மாட்டார் இவளும் கேட்க அச்சப்படுவாள் அப்படித்தான் காலம்.
பெண்களே கோழையாக இருக்க வேண்டாம் தைரியமாக பேசு தைரியமாக நட உனக்கு ஒரு பாதிப்பா யாரிடமும் சொல்ல பயமா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளி மனதிற்குள் பூட்டி வைக்காதே எதையுமே........🤝
சமூக நலன் அதிரை அப்துல் ஜப்பார் துல்கர்ணை🤝

0 Comments