நாட்டை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு துறை உத்தியோகத்தர்களை தற்போதைய அரசாங்கம் வீட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சித்த போது இந்தத் துறை குறித்து நாங்கள் உயரிய குரலில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி, இந்தத் துறையை பாதுகாத்தது ஐக்கிய மக்கள் சக்தியே. சிவில் பாதுகாப்புத்துறை ஊடாக பல அர்ப்பணிப்புகளை மேற்கொண்டு அதிகாரிகள் அனைவருக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கான 24 வீத சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் போது, அவர்களுக்கும் இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்ற போது அவை சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கிடைக்கும். சுய விருப்பின் பேரில் ஓய்வு பெற விரும்புகின்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒரு தொகை பணத்தை வழங்கவும் ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும். இதற்கு மேலதிகமாக பதவி உயர்வு முறைமைகள், கூட்டுக் கொடுப்பனவுகள், ஊனமுற்ற சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான நிவாரணங்கள் என்பனவும் வழங்கப்படும். அநியாயமான முறையில் சேவையிலிருந்து நீக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் அந்த தொழிலைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பதின்மூன்றாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (24) பிற்பகல் தெஹியத்தகண்டிய பொதுச்சந்தைச் வளாகத்திற்கு அருகில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் என பெரும் திரளானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

🟩 சர்வதேச நன்கொடையாளர் மாநாடு கூட்டப்படும்.

கடந்த காலங்களில் உருவாகிய ஜனாதிபதிகளால் வடகிழக்கு தொடர்பில் சர்வதேச நன்கொடையாளர் மாநாடு ஒன்றை நடத்த முடியாமல் போயுள்ளது. தான் ஜனாதிபதி ஆனவுடன் வடகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்து, அதனூடாக ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் வளத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

🟩 அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு பாரிய பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வோம். 

கல்வியை மாத்திரமன்றி விவசாயத்தையும் இலகு படுத்துவோம். ஸ்மார்ட் படுத்துவோம். ஒரு மில்லியன் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவோம். இளைஞர்களுக்கு சொந்த வணிகங்களை மேற்கொள்வதற்கான அறிவை வழங்கி, அவர்களால் ஏற்றுக் கொள்ளத்தக்க அளவு மூலதனத்துடன் பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுப்போம். அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு பாரிய பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

🟩 நெல்லுக்கான நிர்ணய விலை. 

அதேபோன்று விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு நிர்ணைய விலை வழங்கப்படும். நெல் உற்பத்திகளுக்காக நிர்ணய விலை வழங்கப்படும். அது மாத்திரமில்லாமல் விவசாயிகளோடு ஏனைய உற்பத்தியாளர்களையும் இலக்காகக் கொண்டு தரமான மனித வளங்களையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். திறமையுள்ள இளம் தலைமுறையினரை உருவாக்குவோம். அதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

🟩 மக்கள் மயப்படுத்தப்பட்ட பொதுமக்களின் அரசாங்கத்திற்காக ஒன்றிணைவோம்.

சிறந்த நோக்கின் ஊடாக சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு விவசாய உற்பத்திகளை விற்பனை செய்து, அதனூடாக டொலர்களை வருமானமாக பெறும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்போம். இன்று விவசாயிகள் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார்கள். இந்த நிலையிலிருந்து விவசாயிகளை மீட்டெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டைச் சூறையாடிய இந்த ஆட்சியாளர்கள் மக்களை வறியவர்களாக மாற்றி இருக்கின்றனர். வறுமையிலிருந்து மக்களை மீட்டெடுத்து, மக்கள் பயப்படுத்தப்பட்ட பொது மக்களின் ஆட்சியொன்றை ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

விவசாயம், மீன்பிடி, தொழில் முனைவோர், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் அபிலாசைகளையும், சிந்தனைகளையும் புரிந்து கொண்டு இந்த அமைதியாக இருக்கும் பெரும்பாலானோருக்காக போராடும் பொதுமக்களின் சகாப்தத்திற்காக அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியோடு ஒன்றிணைமாறு எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது வேண்டுகோள் விடுத்தார்.