2024 ஜனாதிபதித் தேர்தலில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்டச் செயலாளர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை (ஆசனங்கள்) 04 ஆகும்.
அதன்படி, தொகுதிகள் பின்வருமாறு. அம்பாறை 188,222 பேர், சம்மாந்துறை 99,727 பேர், கல்முனை 82,830 பேர், பொத்துவில் தொகுதியில் 184,653 பேர் ஆகும்.
தபால் மூல வாக்களிப்புக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 27,645 ஆகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 26,778 எனவும் 867 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
42 மையங்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என்றும், ஹார்டி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் 184 வாக்களிப்பு நிலையங்களும், சம்மாந்துறையில் 93 வாக்களிப்பு நிலையங்களும், கல்முனையில் 74 வாக்களிப்பு நிலையங்களும், பொத்துவிலில் 177 வாக்களிப்பு நிலையங்களும் உள்ளடங்கலாக அம்பாறை மாவட்டத்தில் 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.
-அம்பாறை நிருபர் ஷிஹான்-
0 Comments