Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலில் இருந்து இறக்குமதிகளை, 3 மடங்காக அதிகரித்துள்ள எகிப்து


காசா இனப்படுகொலையின் போது எகிப்து மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான சரக்குகளுக்கான முக்கிய போக்குவரத்துப் புள்ளிகளாக எகிப்திய துறைமுகங்கள் மாறிவிட்டதாக அரபி போஸ்ட் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில், 19 கப்பல்கள் எகிப்திய துறைமுகங்களான அலெக்ஸாண்டிரியா மற்றும் டாமிட்டா மற்றும் இஸ்ரேலிய துறைமுகங்களான அஷ்டோட் மற்றும் ஹைஃபா ஆகியவற்றுக்கு இடையே நகர்வதைக் கண்காணித்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில், இஸ்ரேலில் இருந்து எகிப்தின் இறக்குமதிகள் ஏறக்குறைய மூன்று மடங்காக அதிகரித்து, 331.6 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாக விசாரணைகளில் இருந்து அறிய வந்துள்ளது.

Post a Comment

0 Comments