இத்தாலியில் இருந்து கொழும்பில் உள்ள பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றின் ஊடாக அனுப்பப்பட்ட பரிசுப் பொதி ஒன்றில் இருந்து 30 கிலோ கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 212 மில்லியன் ரூபா என சுங்கப் பேச்சாளர், மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர் ஒருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்துகம பிரதேசத்தில் உள்ள முகவரிக்கு இந்த பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.