Ticker

6/recent/ticker-posts

Photo & Video நேபாள விமான விபத்து- விமானத்தில் பயணித்த அனைவரும் பலி ! UPDATE


நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 19 பேருடன் பயணித்த தனியார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் புறப்படும் போது விபத்து ஏற்பட்டது.

காலை 11 மணியளவில் புறப்பட்ட சௌர்யா எயார்லைன்ஸ் விமானத்தில், விமான ஊழியர்கள் உள்பட குறைந்தது 19 பேர் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.






விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானம் முழுவதும் தீயில் கருகியுள்ளது. இந்த நிலையில் முதல்கட்டமாக 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தின் விமானி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் பி.ரி.ஐ செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்தார்.

விமானத்தில் ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments