பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் கலந்துரையாடல் நடத்தப்படும் என வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று (30) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நுகர்வோருக்கு தேவையான சலுகைகளை வழங்குவதற்கு இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
0 Comments