ஹமாஸ் அமைப்பின் அரசியல் விவகார தலைவர்
இஸ்மாயில்ஹானியா படுகொலை செய்யப்பட்டார்.
கூடவே அவரது மெய்ப்பாதுகாவலரும் உயிரிழந்தார்.
ஈரான் ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்கே இஸ்மாயில் ஹானியா ஈரான் சென்றிருந்தார்.
பின்னார் பலத்த பாதுகாப்பு கொண்ட ஈரானின் ராணுவ தங்குமிட வளாகத்தில் அவர் தங்கியிருந்த வேளையிலேயே அவர் மீது கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளை இன்று உயிரிழந்த இஸ்மாயில் ஹானியா அவர்களின் ஜனாஸா தொழுகை ஈரானில் இடம்பெற்ற பின்னர் அங்கிருந்து கட்டார் தோஹாவிற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமை ஜனாஸா நல்லடக்கம் கட்டார் மண்ணில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments