நாட்டிற்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதியை ஆரம்பிக்க நம்பிக்கை உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று (10) பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் பேசி, ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட வரிசையில்… பொதுப் போக்குவரத்து சேவைகள், போக்குவரத்து சேவைகள், பிற போக்குவரத்து சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் மாற்றுகள், சாதாரண வாகனங்கள், பின்னர் சொகுசு வாகனங்கள் என இறக்குமதிக்கு வேலைத்திட்டம் ஒன்றினை தயாரித்து அவர்களுக்குத் வழங்கவுள்ளோம். எனவே, இந்த குழு ஜூலை மாதம் 4ம் திகதி கூடியது, ஒரு மாதத்திற்குள், அதாவது ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திற்குள், நாட்டிற்கு எந்தப் பிரச்சினையும் இன்றி நாங்கள் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என்று நம்புகிறோம் .”
“மூன்றாம் காலாண்டின் தொடக்கத்தில் இருந்து, இதுவரை பயன்படுத்தப்படும் பொது போக்குவரத்து சேவைகள், போக்குவரத்து சேவைகள், மாற்று மற்றும் சாதாரண வாகனங்கள் அதையும் தாண்டி செல்லும் என்று நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம். இதை ஒரு அமைப்பில் கொண்டு செல்ல உள்ளோம்.”
0 Comments