எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுருத்தகம கரந்தெனிய பகுதியில் 3 வயது 6 மாத ஆண் குழந்தை தாக்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கைது செய்ப்பட்டவர் கரந்தெனிய, அனுருத்தகம பகுதியில் வசிக்கும் 24 வயதுடையவராவார்.
சந்தேக நபரின் 24 வயதுடைய மனைவி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த நிலையில், சந்தேக நபரும் குழந்தையும் மட்டுமே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
தந்தையிடம் குழந்தை உணவு கேட்டபோது, குழந்தையை கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன் குழந்தையின் காலினை துவிச்சக்கரவண்டியின் சக்கரத்தின் கீழ் வைத்து தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையை கொடூரமாக தாக்கும் காணொளிகள் வெளிநாட்டில் உள்ள தாய்க்கு அனுப்பியுள்ளதோடு, குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments