Ticker

6/recent/ticker-posts

பலஸ்தீனுக்கு புதிய தலைவலியாகும் மெக்சிகோ ஜனாதிபதி


பலஸ்தீனுக்கு மற்றுமொரு சவாலாக மெக்சிகோ மாறிவிடுமோ என்ற அச்சம் இப்பொழுது உருவாகியுள்ளது. அதற்கு காரணம் அந்நாட்டின் ஜனாதிபதியாக அதுவும் வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் ஜனாதிபதியாக யூத இனப் பெண் தெரிவாகியுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்கா இஸ்ரேலுக்கு நேரடியாக தோல் கொடுக்கும் நிலையில் அதன் பக்கத்து நாடான மெக்சிகோவில் இவ்வாறு யூத ஆட்சி அமைவது என்பது பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலிய யுத்தத்தில் மேலும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

அந்நாட்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் 58.4% வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை க்ளோடியா ஷெய்ண்போம் (Claudia Sheinbaum) பெற்றுள்ளதோடு எதிர் உறுப்பினர் வெறும் 28 வீதத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும் ஜூன் மாதம் 08 ஆம் திகதிதான் இறுதியான முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆனால் இப்பொழுது அந்நாட்டு ஜனாதிபதி 61 வயதான க்ளோடியா ஷெய்ண்போம் (Claudia Sheinbaum) என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.

ஒரு யூதப்பெண்ணின் ஆட்சி மெக்சிகோவில் அமைவது என்பது நான் மேலே சொன்னது போல இஸ்ரேல் பலஸ்தீன் யுத்தத்தில் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் மெக்சிகோ ஜனாதிபதியாக இருந்த லோபஸ் ஓப்ராடர் இஸ்ரேல் பலஸ்தீன் யுத்தத்தில் நடுநிலை வகித்ததையே அவதானிக்க முடிந்தது. அவர் அவ்வாறு நடுநிலை வகித்தார் என்ற காரணமும் அவருடைய தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் புதிதாக 06 வருடங்களுக்கு அந்த நாட்டை பொறுப்பெடுக்கவுள்ள க்ளோடியா ஷெய்ண்போம் இஸ்ரேல் பலஸ்தீன் யுத்த விடயத்தில் என்ன நிலைப்பாட்டை எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

காரணம் சர்வதேச வலையை சரியாக பின்னுவதற்கு முன்னர் சொந்த நாடான மெக்சிகோவின் வலையை அவர் பின்ன வேண்டியுள்ளது. அந்நாட்டின் குற்றங்களை குறைக்க அவருக்கு பல காலம் செல்லும். காரணம் அந்நாட்டின் குற்றங்கள் அடிப்படையில் உலக நாடுகளில் மெக்சிகோ 42 ஆவது இடத்தில் இருக்கிறது.

இன்னொரு பக்கம் அந்நாட்டின் தேசிய உற்பத்தியும் வருடா வருடம் குறைந்து வருவதால் அது அவர்களின் வரவு செலவின் பாரிய குறைகளை தோற்றுவித்து வருகின்றது.

எனவே உள்நாட்டில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே அவர்களுக்கு நேரம் போதாமல் இருக்கும் பொழுது பலஸ்தீன் இஸ்ரேல் யுத்தத்தில் அவர்கள் மூக்கு நுழைக்க விரும்பமாட்டார்கள் என்று கூறப்படுகின்றது. காலம் கடக்கும் பொழுது நிலைப்பாடு வெளியில் வரும்.

Post a Comment

0 Comments