Ticker

6/recent/ticker-posts

ஹிஜாப் அணியத் தடை – வேலையை இராஜிநாமா செய்த ஆசிரியை


இந்தியா – கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் சட்டக் கல்லூரியில் ஆசிரியை ஒருவருக்கு ஹிஜாப் அணிய தடை விதித்ததால் அவர் பணியிலிருந்து விலகியுள்ளார்.

தனியார் சட்டக் கல்லூரியில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் ஆசிரியை சஞ்சிதா காதர், கடந்த மே 31 முதல் பணியிடத்தில் ஹிஜாப் அணிய கல்லூரி நிர்வாகம் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஜூன் 5 முதல் பணியிலிருந்து இராஜிநாமா செய்வதாக ஆசிரியைத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பொதுவெளியில் கல்லூரி மீது விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், ஆசிரியையின் இராஜிநாமாவை நிராகரித்து அவரை இன்று (ஜூன் 11) முதல் கல்லூரிக்கு வர சொல்லியிருப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சஞ்சிதா சில மாதங்களாகவே ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளார். ஆனால், இந்த பிரச்னை கடந்த சில நாட்களில் தீவிரமடைந்ததால் பணியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். தற்போது அவருக்கு அனுப்பப்பட்ட மெயிலில், பணி நேரத்தில் தலையை மூடுமாறு ஆடை அணியத் தடை இல்லை என்று கல்லூரி நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments