இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும்; போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மததீவிரவாதிகள் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் இந்தியாவிற்கு சென்ற நான்கு இலங்கையர்கள் குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலின்அடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.