வாத்துவை - மொல்லிகொட பிரதேசத்தில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்ணாடி போத்தலால் மனைவியின் கழுத்தை அறுத்து பலத்த காயப்படுத்திய நபரை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக வாத்துவை பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாத்துவை மொல்லிகொட சமாந்தர வீதியில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு சுடப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்திற்கு இழக்கான நபர், தனது மனைவிக்கு தொல்லை கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் வீட்டிற்கு சென்றனர்.

அங்கு சந்தேகநபர் கண்ணாடி போத்தலை உடைத்து மனைவியின் கழுத்தில் தாக்கியதாகவும், தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவரை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் சந்தேகநபரை கட்டுப்படுத்த முடியவில்லை.

பின்னர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.