பாதம் இல்லாத சடலமொன்று தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
வெயாங்கொடை- வதுரவ ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
புகையிரத தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் ஆண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், இந்த சம்பவத்தினால் பிரதான புகையிரத போக்குவரத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயங்கொடை பொலிஸாரிடம்
வெயாங்கொட மொட்டுன்ன பிரதேசத்தில் வசித்து வந்த 40 வயதுடைய ரொஷான் மஹாநாம என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
தண்டவாளத்தில் நடந்துச் சென்ற நபர் ஒருவர், தண்டவாளங்களுக்கு இடையில் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு, வெயாங்கொடை புகையிரத நிலையத்திற்கு தகவல் வழங்கினார். அதனையடுத்து சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்
இறந்தவரின் கால்களில் ஒன்று சடலம் இருந்த இடத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் விழுந்து கிடந்துள்ளது. மேலும் இறந்தவருடையது என்று சந்தேகிக்கப்படும் ஒரு ஜோடி காலணிகள் மற்றும் கோடாரி ஆகியவையும் அருகில் கிடந்தன.
கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், எந்த புகையிரதத்தில் இது இடம்பெற்றது என்பது இதுவரை தெரியவரவில்லை எனவும் வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments