இலங்கை பிரஜாவுரிமை வைத்திருந்ததாக தவறான தகவலை கூறியமை, விசா அனுமதியில்லாமல் நாட்டில் தங்கியிருந்தமை, தவறான தகவல்களை முன்வைத்து இராஜதந்திர கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டமை உட்பட்ட காரணங்களை முன்வைத்து முன்னாள் எம்.பி டயானா கமகேவை கைது செய்வதற்கான ஆலோசனைகள் நடத்தப்படுவதாக அறிய முடிகின்றது.

டயானா கமகேவுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பின் பிரதி உத்தியோகபூர்வமாக கிடைத்த பின்னர், அது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் முறையிட குடிவரவு ,குடியகல்வுத் திணைக்களம் தயாராகி வருவதாக அறியமுடிந்தது.

இதேவேளை நீதிமன்ற தீர்ப்புக்கமைய, இதுவரைகாலம் டயானா கமகே பெற்ற எம்.பிக்கான ஊதியம் , இராஜாங்க அமைச்சருக்கான ஊதியம் ,கொடுப்பனவுகளை அவரிடமிருந்து அறவிடவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது