ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் எனவும், அந்த தேர்தலை யாராலும் தடுக்க முடியாது எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (25) ஹட்டன் நகரில் நடைபெற்ற கட்சியின் நிகழ்வில் பிரதம அதிதியாக கந்துரட ஜனதா பெரமுனே தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வி.ரதாகிருஷ்ணன் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த விஜயதாச ராஜபக்ஷ, இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்க்கமான பலம் வாய்ந்த கட்சியாக செயற்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
0 Comments